மும்பை - ஹெளரா விரைவு ரயில் தடம் புரண்டது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் அருகே இன்று அதிகாலை மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் தடம் புரண்டதில் 2 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருப்பதாவது:
“மற்றொரு ரயில் விபத்து. ஆனால் ‘ஃபெயில் மினிஸ்டரின்’ விளம்பரம் மட்டும் தொடர்கிறது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மட்டும் 3 விபத்துகளை அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.
இந்த விபத்துகளில் 17 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஆண்களாக மத்திய ரயில்வே அமைச்சராக அஸ்வினி வைஸ்ணவ் பதவி வகிக்கும் நிலையில், இந்தாண்டில் மட்டும் 6 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில், 5 பயணிகள் ரயில் ஆகும்.
மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு ஜூன் மாதத்தில் ஒரு விபத்தும், ஜூலையில் இரண்டு விபத்தும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.