பருவமழைக் காலங்களில் சொல்லொணாத் துயரங்களை சந்தித்து வரும் கேரள மாநிலத்தில், இந்த ஆண்டும் கனமழையால், கடுமையான நிலச்சரிவு நேரிட்டதில் 66 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறு மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகளில் பெரிய பெரிய பாறைகள் விழுந்திருப்பதால், மூணாறு பகுதிக்கு சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு பகுதிக்குச் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறு பகுதி, மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிப்பு நிலவரம் எதுவும் வெளியாகவில்லை.
கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை, மூணாறு - மறையூர் உள்ளூர் சாலை மற்றும் மூணாறு - பள்ளிவாசல் சாலைகளில் நிலச்சரிவு நேரட்டிருப்பதாகத் தகவல்கள்தெரிவிக்கின்றன.
மூணாறு மற்றும் மாங்குலம் பகுதிகளிலும் நிலச்சரிவு நேரிட்டிருப்பதாகவும், இடுக்கி மாவட்டத்தின் ஆதிவாசிகள் வாழும் பகுதிகள் மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருப்பதால் அங்கு என்ன பாதிப்பு நேரிட்டிருக்கிறது என்று தெரியாமல் மீட்புக் குழு கவலை அடைந்துள்ளது.
வயநாடு மாவட்டத்தில் நேரிட்ட நிலச்சரிவில், பல சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. முக்கிய பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பாதிக்கப்பட்ட
தேவிகுளம் துணை ஆட்சியர் வி.எம். ஜெயகிருஷ்ணன் கூறுகையில், கனமழையால் நேரிட்ட நிலச்சரிவில் ஏராளமான சேறும் பாறைகளும் சாலைகளில் விழுந்துள்ளன. சாலைகளில் விழுந்துள்ள மணல் மற்றும் பாறைகளை அகற்றும் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது என்றார்.
கடந்த 24 மணி நேரத்தில் மூணாறு பகுதியில் 207 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.