கோப்புப்படம் DIN
இந்தியா

மினிமம் பேலன்ஸ் அபராதம்: 5 ஆண்டுகளில் ரூ. 8,500 கோடி வசூலித்த வங்கிகள்!

குறைந்தபட்ச இருப்புத் தொகை அபராதம் குறித்த கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

பொதுத் துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 8,495 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச இருப்புத் தொகை அபராதம் குறித்து மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார்.

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்து வங்கிகளிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வாடிக்கையாளர்கள் கணக்குகளில் வைத்திருப்பது கட்டாயம்.

குறைந்தபட்ச இருப்புத் தொகையானது வங்கி கணக்கின் தன்மை மற்றும் வங்கி இயங்கும் பகுதியை பொறுத்து ரூ. 1,000 முதல் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 13 பொதுத் துறை வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் கடைபிடிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ. 8,495 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் எழுத்துப்பூர்வ பதில்

கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 1537 கோடியும், இந்தியன் வங்கி ரூ.1466 கோடியும், பரோடா வங்கி ரூ.1250 கோடியும் வசூலித்துள்ளது. குறைந்தபட்சமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ. 19.75 கோடி வசூலித்துள்ளது.

மேலும், கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 2,331 கோடி மினிமம் பேலன்ஸ் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 25 சதவிகிதம் அதிகமாகும்.

பாரத ஸ்டேட் வங்கியை பொறுத்தவரை கடந்த 2020 மார்ச் முதல் வாடிக்கையாளர்களிடம் இருந்து மினிமம் பேலன்ஸ் அபராதம் வசூலிக்கப்படுவது இல்லை.

2019 - 20 நிதியாண்டில் மட்டும் பாரத ஸ்டேட் வங்கி ரூ. 640 கோடி அபராதமாக வசூலித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT