மூழ்கிய தண்டவாளம் ANI
இந்தியா

மூழ்கிய தண்டவாளம்.. ரயில்வே ஊழியரின் எச்சரிக்கையால் நிறுத்தப்பட்ட ரயில்!

வள்ளத்தோள் நகர்-வடக்கஞ்சேரி ரயில் நிலையத்துக்கு இடையே தண்டவாளம் மூழ்கியது.

DIN

கேரளத்தில் தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கியது குறித்து ரயில் ஓட்டுநருக்கு உரிய நேரத்தில் தகவல் அளிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் முழுவதும் கனமழை பெய்து நிலையில், திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உள்பட்ட வள்ளத்தோள் நகர்-வடக்கஞ்சேரி ரயில் நிலையத்துக்கு இடையே வெள்ள நீரில் தண்டவாளம் மூழ்கியுள்ளது.

இந்த நிலையில், அவ்வழியாக வந்த பயணிகள் ரயில் 16526-ஐ ரயில் நிலைய ஊழியர் உரிய நேரத்தில் தகவல் கொடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனால், கேரளத்தில் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவ்வழியாக செல்ல வேண்டிய எர்ணாகுளம் - கண்ணூர்(16305), திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி(16791), திருவனந்தபுரம் - சொரனூர்(16302) ஆகிய 3 ரயில்களும் பகுதி ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இன்று காலை மும்பை - ஹெளரா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், கேரளத்தில் மற்றொரு விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT