வயநாடு நிலச்சரிவு: மேலும் ஒரு தமிழர் உடல் கண்டெடுப்பு!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் ஒரு தமிழரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் ஒரு தமிழரின் உடல் இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான காளிதாஸ் என்பவரும் பலியானார். இதேபோல மேலும் ஒரு தமிழரின் உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டம் கூடலூர் ஐயங்கொல்லியைச் சேர்ந்த கல்யாண்குமார் (60) என்பவரின் உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கல்யாண்குமார் வயநாடு மாவட்டம் சூரல்மலையில் உள்ள கோயிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.