இந்தியா

இன்ஃபோசிஸ் மீது ரூ. 32,000 கோடி வரி ஏய்ப்பு புகார்!

இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது ரூ. 32,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.

DIN

இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது ரூ. 32,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்தில்

ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்திருப்பதாவது, இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளிநாடுகளில் கிளைகளை நிறுவி அதன்மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜூலை 2017 முதல் 2021-2022 வரையிலான காலகட்டத்தில், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவைகள் வரி(ஐஜிஎஸ்டி) மூலம் ரூ. 32,000 கோடி வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளதாக ஜிஎஸ்டி இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

வெளிநாட்டு சேவைகளைப் பெற்று பயனடைந்துள்ள இன்ஃபோசிஸ் லிமிடட் பெங்களூரு நிறுவனம் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி செலுத்தத் தவறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் மேற்கண்ட புகார் குறித்து விளக்கம் கேட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்நிறுவனம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ஜிஎஸ்டி விதிமுறைகளின்படி, வெளிநாட்டு கிளை நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள சேவைகளுக்கு ஜிஎஸ்டி பொருந்தாது எனவும், தங்கள் நிறுவனங்களின் மேற்கண்ட செலவினங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்தத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உலக யானைகள் தினம்! யானைகள் எதிா்கொள்ளும் சவால்களும் - தீா்வுகளும்!

காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

அழகேசன் சாலை சந்திப்பு முதல் எருக் கம்பெனி வரை இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

வெறிநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக விடியோ: இளைஞரிடம் விசாரணை

SCROLL FOR NEXT