முகப்பு
இந்தியா

பாஜக மீதான நம்பிக்கைக்கு நன்றி: மோடி

அருணாச்சலில் பாஜகவின் பெரும்பான்மையினை அடுத்து, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

Updated On : 2 ஜூன், 2024 at 3:45 PM
பகிர்:

அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக தொடந்து முன்னிலையில் இருந்து வருகிறது. பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றதையொட்டி, பிரதமர் மோடி அருணாச்சலப் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதாவது, ”அருணாச்சலப் பிரதேச மக்களுக்கு நன்றி! மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் பாஜகவிற்கு தெளிவான உத்தரவை வழங்கியுள்ளனர். மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜக தொடர்ந்து அதிக உத்வேகத்துடன் செயல்படும்” எனக் கூறியுள்ளார்.

அருணாச்சலில் 60 பேரவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் 32 பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அருணாச்சலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் முதல்வர் பீமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து சில தொகுதிகளில் மட்டும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

Advertisement

பிற்பகல் 2 மணி நிலவரப்படி, அருணாச்சலப் பிரதேசம் (மொத்த தொகுதிகள் 60) வாக்கு எண்ணிக்கை - முன்னணி மற்றும் வெற்றி நிலவரம்:

பாஜக --> 44 இடங்களில் வெற்றி, 2 இடங்கள் முன்னிலை

என்பிபி --> 5 இடங்களில் வெற்றி

காங்கிரஸ் --> 1

இதர கட்சிகள் --> 2 இடங்களில் வெற்றி, 1 முன்னிலை

இதன் மூலம் அருணாச்சலில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கிறது. முதல்வர் பீமா காண்டு மீண்டும் முதல்வர் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.