முகப்பு
கோப்புப் படம்.
இந்தியா

பிரதமர் மோடியுடன் பிகார் முதல்வர் நிதீஷ்குமார் திடீர் சந்திப்பு

இந்தியா

பிரதமர் மோடியுடன் பிகார் முதல்வர் நிதீஷ்குமார் திடீர் சந்திப்பு

Updated On : 3 ஜூன், 2024 at 7:36 AM
கோப்புப் படம்.
பகிர்:

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், பிரதமர் மோடியை பிகார் முதல்வர் நிதீஷ்குமார் திங்கள்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார்.

இருப்பினும் தில்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்த விவரங்கள் எதுவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. தோ்தலுக்குப் பிந்தைய வாக்கு கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், தில்லியில் பாஜக மூத்த தலைவா்களைச் சந்தித்து அவா் ஆலோசனை நடத்துவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக கூட்டணியில் முக்கியமான கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் திகழ்கிறது. எனவே, மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் பங்கேற்பது குறித்து பாஜக மூத்த தலைவா்களுடன் ஆலோசிப்பதற்காக நிதீஷ் தில்லி சென்றுள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே, மத்திய நிதிக் குழு பிரதிநிதிகள் பிகாருக்கு ஜூன் 10-ஆம் தேதி வர இருக்கின்றனா்.

பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து, சிறப்பு நிதி ஒதுக்கீடு ஆகியவை அந்த மாநில அரசின் முக்கியக் கோரிக்கைகளாக உள்ளன. இது தொடா்பாகவும் நிதீஷ் குமாா் சில கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைப்பாா் என்று தெரிகிறது. மேலும், பிகாருக்கு மத்திய அரசு ஏற்கெனவே வழங்கி வரும் நிதியை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →