தில்லி பாஜக தலைமையகத்தில் மும்முரமாக நடைபெறும் அலங்காரப் பணிகள் படம் | ஏஎன்ஐ
இந்தியா

கருத்துக்கணிப்புகள் எதிரொலி: விழாக்கோலம் பூண்டுள்ள பாஜக தலைமையகம்!

தேர்தல் வெற்றியைக் கொண்டாடத் தயாராகி வரும் பாஜக தலைமையகம்!

DIN

7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும், நாளை(ஜுன் 4) எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, மக்களவைத் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் ஜூன் 1-ஆம் தேதி மாலை வெளியாகிவிட்ட நிலையில், அவற்றில் பெரும்பான்மையான நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இப்போதே வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடத் தயாராகிவிட்டனர் பாஜக தொண்டர்கள்.இதையடுத்து, புதுதில்லியில் உள்ள பாஜக தலைமையகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாஜக தலைமையகத்தில் பந்தல் கட்டும் பணிகள் உள்பட பலவிதமான அலங்காரப் பணிகள் முழுவீச்சில் மேர்கொள்ளப்பட்டு வருகின்றன.

தில்லி பாஜக தலைமையகத்தில் மும்முரமாக நடைபெறும் அலங்காரப் பணிகள்

மறுபுறம், கருத்துகணிப்புகள் அனைத்தையும் நிராகரித்துள்ளன காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள். இந்த் நிலையில், புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்கும் தேர்தல் வெற்றியைக் கொண்டாட, அலங்காரப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தில்லி காங்கிரஸ் தலைமையகத்தில் மும்முரமாக நடைபெறும் அலங்காரப் பணிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

Fake Dating! | சமூக வலைதளத்தில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

SCROLL FOR NEXT