இந்தியா

உழைப்பை இரட்டிப்பாக்குவேன்: தோல்விக்கு பிறகு அண்ணாமலை கருத்து

கோவை தொகுதி மக்கள் முன்னேற்றத்துக்கான உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என்றார் அண்ணாமலை.

DIN

கோவை தொகுதி மக்கள் முன்னேற்றத்துக்கான உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என உறுதி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் 1,16,131 வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை பின்னடைவில் உள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட எனக்கு, 4.50 லட்ச வாக்குகள் அளித்து, அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்திருக்கும் கோவை தொகுதி மக்கள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவையின் புதிய மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் ராஜ்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட மாற்று கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை தொகுதி வளர்ச்சிக்கு, அவர் மேற்கொள்ளும் அனைத்து நலத்திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவை அளிப்பதோடு, தொடர்ந்து கோவை தொகுதி பொதுமக்கள் முன்னேற்றத்துக்கான என் உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என்று உறுதி அளிக்கிறேன் என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

கல்லிடைக் குறிச்சி அருகே கோயில் வளாகத்தில் உலாவும் கரடி

களக்காடு - திருநெல்வேலி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

டி-மாா்ட் வருகையால் சிறுவியாபாரிகள் பாதிக்கப்படுவா்: ஏ.எம். விக்கிரமராஜா

நெல்லையில் லாரி சேதம்: 7 போ் கைது

SCROLL FOR NEXT