செய்தியாளர் சந்திப்பில் அபிஷேக் மனு சிங்வி  
இந்தியா

வாக்கு எண்ணிக்கை மந்தமாக காரணம் என்ன? காங்கிரஸ்

வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடைபெற காரணம் என்ன? என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

DIN

வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடைபெற காரணம் என்ன? என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. எனினும் பிற்பகலுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடைபெறுவதாக புகார் எழுந்தது.

தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ பக்கத்திலும், வாக்கு எண்ணிக்கை அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிற்பகல் 2.30 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடைபெற்று வருவதாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேக் சிங்வி, இந்திய நாட்டின் மக்கள் புத்திசாலித்தனமானவர்கள். பத்திரிகையாளர்களோ அல்லது கருத்துக் கணிப்புகளோ அவ்வளவு புத்திசாலித்தனமாக இல்லை. எதிர்காலத்தை கணிப்பது மக்களை அவமதிக்கும் செயல்.

வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடைபெற காரணம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஷஸ் தொடர்: வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் கொடுத்த அறிவுரை!

சசிகுமாரின் மை லார்ட்..! சின்மயி குரலில் முதல் பாடல்!

பட்டுப் பாரம்பரியம்... விமலா ராமன்!

ஒரு நாளில் 1,000 கி.மீ.! 5 நாள்களில் 5,400 கி.மீ. தூரம் கடந்த பறவை!

சோலை இளங்கிளியே... கௌரி கிஷன்!

SCROLL FOR NEXT