இந்தியா

தேர்தல் முடிவுகள்: யூனியன் பிரதேசங்களின் நிலை என்ன?

மக்களவைத் தேர்தலில் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து காணலாம்.

DIN

மக்களவைத் தேர்தலில் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து காணலாம்.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அந்தமான் நிகோபர் தீவுகளில் எண்ணப்பட்டு வரும் வாக்குகளில், பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளது.

பாஜக சார்பில் போட்டியிட்ட பிஷ்ணு பாட ரே 28970 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட குல்தீப் ராய் ஷர்மா 69430 வாக்குகளை பெற்றுள்ளார். இதில் பாஜக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. (மாலை 5.20 மணி நிலவரம்)

தாத்ரா நகர் ஹவேலி

தாத்ரா நகர் ஹவேலி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தெல்கார் காலாபென் மோகன்பாய் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

லட்சத்தீவுகள்

லட்சத்தீவு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முகமது ஃபைசல் 2647 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தார்.

லடாக்

லடாக் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் முகமது ஹனீஃபா 28,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் டிசெரிங் நம்க்யால் 35,770 வாக்குகள் பெற்்றார்.

சண்டிகர்

சண்டிகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மணீஷ் திவாரி 2504 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சஞ்சய் டேன்டன்

2,14,153 வாக்குகள் பெற்றுள்ளார். மணீஷ் திவாரி 216657 வாக்குகள் பெற்றுள்ளார்.

புதுச்சேரி

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 93,197 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

SCROLL FOR NEXT