சரண்ஜித் சிங்  
இந்தியா

பஞ்சாபில் முதல் வெற்றி! முன்னிலையில் காங்கிரஸ்!!

ஜலந்தர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி 1,75,993 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

DIN

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளில் முன்னிலையில் நீடித்து வருகிறது. மேலும் ஜலந்தர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பஞ்சாபிலுள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று (ஜுன் 4) காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

தற்போது பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் முன்னிலையில் நீடித்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி கட்சி 3 இடங்களிலும், சிரோன்மணி அகாலிதளம் ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் இரு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.

இதில், ஜலந்தர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி 1,75,993 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுஷில் குமார் ரிங்கு 2,14,060 வாக்குகளைப் பெற்றார். ஆம் ஆத்மியின் பவன் குமார் டினு 2,08,889 வாக்குகளைப் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT