ராகுல் காந்தி 
இந்தியா

காங்கிரஸ் வியூகம் என்ன? நாளை தெரியும் என்கிறார் ராகுல்

மோடியையும் அமித் ஷாவையும் மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

DIN

புது தில்லி: இந்தியா கூட்டணியின் வியூகத்தை தற்போது கூறினால், நரேந்திர மோடி உஷாராகிவிடுவார் என்றும் இது குறித்து நாளை அறிவிப்போம் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியையும் மத்திய அமைச்சர் அமித் ஷாவையும் மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை மற்றும் வெற்றி நிலவரங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது, நாட்டை பிரதமர் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் வழிநடத்த வேண்டாம் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாகவும் சந்தேகத்துக்கு இடமின்றியும் தெளிவாகக் கூறிவிட்டிருக்கிறது. இவர்கள் நாட்டை வழிநடத்துவதை விரும்பவில்லை. அரசியல் சாசனத்தை இவர்கள் நடத்தும் விதத்தை யாரும் ஊக்குவிக்கவில்லை. இது நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய தகவல் என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் காங்கிரஸ் மதிக்கிறது என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை காங்கிரஸ் தொடர்பு கொள்ளுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்தியா கூட்டணி தனது வியூகத்தை நாளை முடிவு செய்யும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT