முகப்பு
இந்தியா

ரே பரேலியில் ராகுல் காந்தி அசத்தல் வெற்றி!

ரே பரேலி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி.

Updated On : 4 ஜூன், 2024 at 3:12 PM
ராகுல்
பகிர்:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் ரே பரேலியில் வெற்றி பெற்றுள்ளார். சோனியா காந்தி ஐந்து முறை எம்.பி.யாக இருந்த தொகுதியில் அவரது மகன் ராகுல் எம்.பி.யாகிறார்.

பாஜகவின் வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கை 3,90,030 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் வெற்றி பெற்றுள்ளார்.

ரே பரேலி தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா பெற்றிருந்த வாக்கு வித்தியாசத்தைக் காட்டிலும் ராகுல் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்துள்ளார். தினேஷ் பிரதாப் சிங் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்.

ரே பரேலி தொகுதியில் சோனியா 2004ஆம் ஆண்டு முதல் எம்.பி.யாக உள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். ஆனால் இந்த முறை அவர் மக்களவைக்குப் போட்டியிடாமல் நேரடியாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி ரே பரேலியில் போட்டியிட்டு அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →