முகப்பு
இந்தியா

மோடியை ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு!

நரேந்திர மோடியை ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா

மோடியை ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு!

நரேந்திர மோடியை ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.

Updated On : 7 ஜூன், 2024 at 1:41 PM
பகிர்:

3-வது முறையாக ஆட்சியமைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அவரது மாளிகையில் சந்தித்த மோடி, தனக்கு ஆதரவளிக்கும் எம்.பி.க்களின் பட்டியலை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆட்சியமைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கூட்டணி கட்சித் தலைவர்கள், பாஜக மூத்த தலைவர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், நாடாளுமன்றக் குழு தலைவராக, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை ராஜ்நாத் முன்மொழிய, அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் அதனை வழிமொழிய, ஒருமித்த குரலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக மோடி ஜூன் 9-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.

பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக அக்கட்சி ஆட்சியமைக்கவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →