மம்தா பானர்ஜி (கோப்புப்படம்) 
இந்தியா

’இந்தியா கூட்டணி ஆட்சி... பொறுத்திருந்து பாருங்கள்’: மம்தா பானர்ஜி நம்பிக்கை!

இந்தியா கூட்டணி இன்று இல்லையெனில் நாளை ஆட்சியமைக்கக் உரிமை கோரலாம் என மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

DIN

”இந்தியா கூட்டணி இப்போது ஆட்சியமைக்க உரிமை கோராமல் இருந்திருக்கலாம், ஆனால் நாளை எங்களால் ஆட்சியமைக்க முடியாது என்று அர்த்தமில்லை” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களுடன் பேசிய மம்தா பானர்ஜி, “இந்த நாட்டிற்கு மாற்றம் தேவை. நம் நாடு மாற்றத்தை எதிர்பார்க்கிறது. இந்த ஆட்சி மாறிவிடும். நாங்கள் காத்திருந்து இந்த நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். இந்த ஆட்சிக் கூட்டணி நரேந்திர மோடிக்கு எதிராக உள்ளது. இந்த முறை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கக் கூடாது. வேறு எவருக்கும் ஆட்சிப் பொறுப்பை வழங்க வேண்டும்”

”பாஜக அரசு சட்டத்துக்குப் புறம்பாகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இன்று இந்தியக் கூட்டணி ஆட்சியமைக்க உரிமைக் கோரவில்லை. நாளையும் இதே போன்று இருக்கும் என்று அர்த்தமில்லை. கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள்” என்று பேசியுள்ளார்.

மேலும், ”பாஜகவின் கூட்டணி நிலையற்றது. இந்த பலவீனமான மத்திய அரசு ஆட்சியிலிருந்து விலகினால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பீர்களா என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு எங்கள் கட்சி பங்கேற்காது எனவும், எங்களுக்கு அழைப்பு வரவில்லை என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.

அத்துடன், திரினாமூல் காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற தொடர்ந்து குரல் கொடுப்பார்கள் என்றும் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT