ராகுல் Kamal Singh
இந்தியா

வயநாடா, ரே பரேலியா? 3, 4 நாள்களில் அறிவிப்பு: கே.சி. வேணுகோபால்

வயநாடா, ரே பரேலியா? என்பது 3, 4 நாள்களில் தெரியும்

DIN

தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் எந்த தொகுதியை வைத்துக் கொண்டு எந்தத் தொகுதியில் ராஜிநாமா செய்யப்போகிறார் என்பது குறித்து 3, 4 நாள்களில் ராகுல் அறிவிப்பார் என கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

ஜூன் 15ஆம் தேதி 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜூன் 17ஆம் தேதிக்குள் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களை சந்திப்பில் பங்கேற்றார். அப்போது, அவரிடம், ராகுல் காந்தி எந்தத் தொகுதியை தக்க வைக்கப் போகிறார் என்பது குறித்து கேட்டதற்க, இன்னும் 3 அல்லது 4 நாள்களில் அவர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று பதிலளித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் இருந்து மக்களவைக்குத் தோ்வாகியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அடுத்த 2 வாரங்களில் ஏதேனும் ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று சட்ட வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், ராகுல் காந்தி எந்த தொகுதியில் தனது எம்.பி. பதவியைத் தக்க வைத்துக் கொள்வாா்? என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

18-ஆவது மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி களம் கண்டாா்.

ரேபரேலி தொகுதியில் 3.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வயநாட்டில் 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் ராகுல் வெற்றியடைந்தாா். இரண்டு தொகுதிகளிலும் வென்றுள்ள ராகுல், ஏதேனும் ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

வாகன விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ராணிப்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளி 42-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

காஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி

திண்டுக்கல், பழனியில்  நாளை மின்தடை

SCROLL FOR NEXT