முகப்பு
தமிழ்நாடு

ஆட்சியில் பங்கு என்பது கட்சியின் நிலைப்பாடு அல்ல : கே.சி. வேணுகோபால்

தவெக உடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு உங்கள் யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என கே.சி. வேணுகோபால் பேச்சு.

Updated On : 17 பிப்ரவரி 2026, 8:05 pm IST
செய்தியாளர் சந்திப்பில் கே.சி. வேணுகோபால் - படம் - எக்ஸ்
பகிர்:

கே.சி. வேணுகோபால் பேட்டி: ஆட்சியில் பங்கு என்பது கட்சியின் நிலைப்பாடு அல்ல என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

சென்னை முகப்பேரில் நடைபெற்ற மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு பிறகு மாநில தலைவர் செல்வப்பெருந்தகையுடன் இணைந்து கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

Advertisement

Advertisement

''நாங்களும் ஒரு அரசியல் கட்சிதான். எங்களுக்கு லட்சியங்கள் உள்ளன. பொதுவெளிகளில் கூட்டணி குறித்து கூறப்படும் கருத்துகள் அவர்களின் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே. அது கட்சியின் நிலைப்பாடு அல்ல.

கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பேசக்கூடாது என காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. திமுகவிடம் எங்கள் நிலைப்பாடு குறித்து எடுத்துக் கூறி இறுதி முடிவு எடுக்கப்படும்'' எனக் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் தவெக உடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கே.சி. வேணுகோபால், ''உங்கள் யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது'' எனக் குறிப்பிட்டார்.

summary

Participation in government is not the partys position K.C. Venugopal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.