முகப்பு
இந்தியா

கேரள முதல்வராகும் கே.சி. வேணுகோபால்? பதவியேற்பு விழாவில் விஜய் பங்கேற்பு?

கேரள முதல்வராக கே.சி. வேணுகோபால் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்...

கே.சி. வேணுகோபால், விஜய் - ANI
பகிர்:

கேரள முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற நிலையில், முதல்வரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைமை குழு அமைத்தது.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

காங்கிரஸ் பார்வையாளர்கள் அஜய் மாக்கன் மற்றும் முகுல் வாஸ்னிக் தலைமையிலான குழு தங்கள் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் சமர்ப்பித்துள்ளனர்.

அதில், கேரளத்தின் அடுத்த முதல்வராக கே.சி. வேணுகோபாலை தேர்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

முதல்வராக கே.சி. வேணுகோபால் பதவியேற்கும் பட்சத்தில், தனது ஆலப்புழா மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வார்.

பதவியேற்பு விழாவில் விஜய்?

கேரள முதல்வர் மற்றும அமைச்சரவை பதவியேற்பு விழா வருகின்ற திங்கள்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுக்கும் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வென்றது. காங்கிரஸ் மட்டும் 63 இடங்களில் வெற்றி பெற்றது.

இடது ஜனநாயக முன்னணி வெறும் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

summary

Will K.C. Venugopal Become Kerala's Chief Minister? Will Vijay Attend the Swearing-in Ceremony?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments