முகப்பு
இந்தியா

தாணேவில் குழந்தை கடத்தல்: இருவர் கைது

ஆறுமாதக் குழந்தையைக் கடத்தியதாக இருவர் கைது

Updated On : 9 ஜூன், 2024 at 12:24 PM
கோப்புப் படம்
பகிர்:

மகாராஷ்டிராவில் ஆறுமாதக் குழந்தையைக் கடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவின் தாணே மாவட்டத்தில், ஜூன் 7ஆம் தேதி அதிகாலையில் சாலையோர நடைபாதையில், துப்புரவு பணியாளரான தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த ஆறுமாதக் குழந்தையை ஒரு ஆட்டோ ஓட்டுநர் கடத்திச் சென்றுள்ளார்.

குழந்தையின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மூன்று குழுக்களாக குழந்தையைத் தேடுவதற்கான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது, தினேஷ் பையல்லால் சரோஜ் என்ற ஆட்டோ ஓட்டுநர் தான் குழந்தையைக் கடத்தியவர் என்பது தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டதில், அங்கித்குமார் ராஜேந்திரகுமார் பிரஜாபதி என்பவரின் வீட்டில், கடத்தப்பட்ட குழந்தை இருப்பது தெரியவந்தது. அதன் பின்னர் குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

காவல்துறையினர் தெரிவித்ததாவது, ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர், சாலை வழியாகச் சென்றபோது, குழந்தை தனது தாயுடன் தூங்குவதைக் கவனித்துள்ளனர். அவர் குழந்தையைக் கடத்திச் சென்று தையல்காரரிடம் சென்றுள்ளார் என்று கூறினர். குழந்தையைக் கடத்திய இருவர் மீதும் ஐபிசி பிரிவுகள் 370-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →