இந்தியா

அமைச்சராக பதவியேற்றார் சிராக் பாஸ்வான்!

பிகார் மாநிலத்தின் ஹாஜிப்பூர் தொகுதியில் சிராக் பாஸ்வான் வெற்றி பெற்றார்.

DIN

லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகனான சிராக் பாஸ்வான், நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பிகார் மாநிலத்தின் ஹாஜிப்பூர் தொகுதியில் சிராக் பாஸ்வான் வெற்றி பெற்றார்.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் பிரதமராக பதவியேற்றுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 3 முறை பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேருவின் சாதனையை மோடி சமன் செய்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர்.

மத்திய அமைச்சரவையில் பிரதமர் உள்பட மொத்தம் 72 அமைச்சர்கள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. 24 மாநிலங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகின் இலக்கணம்... ருக்மினி வசந்த்!

ஓரினச் சேர்க்கை விவகாரம்: கொல்லப்பட்ட குழந்தையின் சடலம் தோண்டி எடுப்பு

நிம்மதியாக ஓய்வுபெற முடியாது: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பிரியங்கா காந்தி மிரட்டல்?

அருண் விஜய்யின் ரெட்ட தல வெளியீட்டுத் தேதி!

அமன்ஜோத் கௌர், ஹர்லீன் தியோலுக்கு உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT