அமைச்சராக பொறுப்பேற்ற ஜெ.பி. நட்டா!
பாஜக தேசிய செயலாளர் ஜெ.பி. நட்டா மத்திய அமைச்சராக இன்று (ஜூன் 9) பொறுப்பேற்றுக்கொண்டார்
பாஜக தேசிய செயலாளர் ஜெ.பி. நட்டா மத்திய அமைச்சராக இன்று (ஜூன் 9) பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதேபோன்று மத்தியப் பிரதேச மாநில முதல்வராக இருந்த சிவராஜ் சிங் செளஹான் இம்முறை மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் பிரதமராக பதவியேற்றார். இதன்மூலம் தொடர்ந்து 3 முறை பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேருவின் சாதனையை மோடி சமன் செய்தார்.
தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நாடு முழுவதும் இருந்து பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.
சர்வதேச நாடுகளின் தலைவர்கள், சினிமா, மருத்துவம், தொழில்துறைச் சேர்ந்த பிரபலங்களும் விழாவில் கலந்துகொண்டனர்.