முகப்பு
இந்தியா

நீட் தேர்வு முறைகேடு; நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்- ராகுல் காந்தி

நீட் முறைகேடு விவகாரம்: நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்- ராகுல் காந்தி

Updated On : 9 ஜூன், 2024 at 6:38 AM
பகிர்:

நீட் குளறுபடி தொடர்பாக நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி குரல் எழுப்பும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காநத்தி தெரிவித்துள்ளார்.

நீட் குளறுபடி விவகாரத்தில் உங்கள் குரலாக மாறுவேன் என ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நீட் குளறுபடியால் 24 லட்சம் மாணவர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்வு சீர்குலைந்துள்ளது. நீட் தேர்வில் முறைகேடு நடந்திருந்தும் அரசு தொடர்ந்து அதனை மறுத்து வருகிறது. ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 பேர் முதலிடம் பெற்றது சாத்தியமில்லாதது. கல்வி மாஃபியா, அரசு இயந்திரம் சேர்ந்து நடத்தும் வினாத்தாள் கசிவைத் தடுக்க எங்களிடம் திட்டம் உள்ளது.

இந்தியா கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ள இளைஞர்களின் குரலை நசுக்க விடமாட்டேன். மாணவர்களின் குரலாக மாறி நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக கேள்வி எழுப்புவேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். நிகழாண்டு நீட் தோ்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதன் மூலம் 6 போ் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக் குறிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

நீதிமன்றங்களை நாடியவா்களுக்கு அத்தகைய மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்றவா்களுக்கு ஏன் அவ்வாறு வழங்கப்படவில்லை என கேள்வி எழுந்துள்ளது. நீட் தோ்வு முடிவுகள் பல்வேறு குழப்பங்களுக்கும், விமா்சனங்களுக்கும் வித்திட்டுள்ள நிலையில், இதுதொடா்பான விளக்கத்தை தேசிய தோ்வு முகமை வெளியிட்டது. அதில், வெளிப்படைத்தன்மையுடனும், நோ்மையுடனும் நீட் தோ்வுகள் நடத்தப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

நேர இழப்பு காரணமாக சில கேள்விகளுக்கு விடையளிக்க முடியவில்லை என பஞ்சாப் - ஹரியானா, தில்லி, சண்டீகா் உயா் நீதிமன்றங்களில் சில தோ்வா்கள் மனு தாக்கல் செய்திருந்ததாகவும், சிசிடிவி கேமராக்களை கண்காணித்து அதன் பேரில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியதாகவும் என்டிஏ தெரிவித்திருந்தது. அதேபோன்று இயற்பியல் பிரிவில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு இரு விடைகள் பொருத்தமானதாக இருந்தன.

இதையடுத்து இரு விடைகளில் ஏதாவது ஒன்றைத் தோ்வு செய்தவா்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. அவ்வாறு இரண்டில் ஒன்றை தோ்வு செய்து மதிப்பெண் பெற்றவா்களில் 44 பேரும், நேர இழப்புக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டவா்களில் 6 பேரும் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்ாக என்டிஏ விளக்கமளித்திருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →