dot com
இந்தியா

காங்கிரஸின் 101-வது எம்.பி.!

சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பு

DIN

சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

பிகார் மாநிலம் பூர்ணியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற பப்பு யாதவ், மீண்டும் காங்கிரஸில் இணைந்து பணியாற்ற விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியையும் சந்தித்து தனது விருப்பத்தை அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் எம்.பி.க்களின் எண்ணிக்கை 100லிருந்து 101ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பப்பு யாதவ், 1990இல் தனது முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் சிங்கேஸ்வர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக, ஜனதா தளத்தின் சியா ராம் யாதவை 21,378 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

1991இல் 10வது மக்களவைத் தேர்தலில் பூர்ணியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1998 தேர்தலில் பாஜகவின் ஜெய் கிருஷ்ணா மண்டலிடம் தோல்வியடைந்தார். 1996இல் சமாஜவாதி கட்சியின் வேட்பாளராகபூர்ணியாவிலிருந்து இரண்டாவது முறையாக மீண்டும் 3,16,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

1999இல் 13வது மக்களவைக்கு பூர்ணியாவிலிருந்து சுயேச்சை வேட்பாளராக ஜெய் கிருஷ்ணா மண்டலை 2,52,566 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

2004இல் ராஷ்டிரீய ஜனதா தளத்தின் வேட்பாளராக மாதேபுரா தொகுதியின் இடைத்தேர்தலில் ராஜேந்திர பிரசாத் யாதவை தோற்கடித்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2015இல் ஜன் அதிகார் கட்சியை உருவாக்கினார், ஆனால் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.

2014இல் 16வது மக்களவை மாதேபுராவில் ஜனதா தளத்தின் சரத் யாதவை 56,209 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT