இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்: தேடுதல் வேட்டையில் ராணுவம்

பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: ரீசியில் 10 பேர் உயிரிழப்பு, 33 பேர் காயம்

DIN

ஜம்மு-காஷ்மீரின் ரீசியில் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலைத்தொடர்ந்து அந்த பகுதியில் இந்திய ராணுவத்தினர் திங்கள்கிழமை காலை தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் இருந்து ஆன்மிகப் பயணமாக பக்தா்கள் ஒரு பேருந்தில் ஜம்மு-காஷ்மீருக்கு சென்றனா். ஜம்மு-காஷ்மீரின் ரீசி மாவட்டத்தில் உள்ள சிவ கோத்ரி ஆலயத்தில் இருந்து கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி ஆலயத்துக்குச் சென்று கொண்டிருந்தனா்.

தெரியாத் என்ற கிராமம் அருகே பேருந்து சென்றபோது, பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. அதில் 10 போ் உயிரிழந்தனா். 33 போ் பலத்த காயமடைந்தனா். ரஜௌரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் இதற்கு முன்பு அவ்வப்போது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், இதுவரை அதிகப்படியான பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறாத ரீசி மாவட்டத்திலும் தற்போது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இதையடுத்து அந்த பகுதியில் இந்திய ராணுவத்தினர் திங்கள்கிழமை காலை தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப் பகுதிகளில் தேடுதல் பணியில் ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் மாநில பேரிடர் மீட்புப் படையும் ரீசிக்கு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT