முகப்பு
இந்தியா

மூன்றாவது முறை பிரதமர்.. மோடியின் முதல் கையெழுத்து!

மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்ற மோடியின் முதல் கையெழுத்து!

இந்தியா

மூன்றாவது முறை பிரதமர்.. மோடியின் முதல் கையெழுத்து!

மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்ற மோடியின் முதல் கையெழுத்து!

Updated On : 10 ஜூன், 2024 at 8:20 AM
பகிர்:

புது தில்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்திருக்கும் நிலையில், மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வாகியிருக்கும் மோடி இன்று முதல் கையெழுத்திட்டுள்ளார்.

மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பலன் பெறும் திட்டங்களுக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதியை விடுவிப்பதற்கான கோப்பில்தான் பிரதமர் இன்று முதல் கையெழுத்திட்டுள்ளார்.

தில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்ட பிரதமர் மோடி, பிரதமரின் விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் 17வது தவணையை விடுவிப்பதற்கான ஆவணத்தில் மோடி கையெழுத்திட்டிருக்கிறார்.

இது பற்றி பேசிய மோடி, முதல் நடவடிக்கை விவசாயிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டிருப்பதன் மூலம், விவசாயிகளின் வாழ்வுக்காக எங்கள் அரசு முழு அர்ப்பணிப்புடன் இருப்பதை காட்டுகிறது. வருங்காலங்களில் விவசாயிகள், விவசாயத் துறைக்காக அதிகம் உழைக்கவிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →