முகப்பு
இந்தியா

சேவா தீர்த்! பிரதமர் மோடி கையெழுத்திட்ட முதல் கோப்புகள் என்னென்ன?

சேவா தீர்த் புதிய கட்டடத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்ட முதல் கோப்புகள் பற்றி..

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 12:33 PM
பிரதமர் மோடி கையெழுத்து
பகிர்:

பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், அமைச்சரவை செயலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்த சேவா தீர்த் புதிய கட்டடத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் முதல் கையெழுத்து "சேவை உணர்வைப் பிரதிபலிக்கும் வகையிலும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவுக்குமானதாக இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சேவா தீர்த் என்ற புதிய பிரதமர் அலுவலகக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

புதிதாகத் திறக்கப்பட்ட பிரதமர் அலுவலகத்துக்குள் வந்த நரேந்திர மோடி, பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்து பெண்கள், இளைஞர்கள் மற்றும் உதவி தேவைப்படக்கூடிய குடிமக்களுக்கான முக்கியமான முடிவுகள் தொடர்பான முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

'சேவா தீர்த்' என்ற புதிய கட்டடத்தை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். சிறப்பு பூஜைகளுடன் கட்டடம் திறக்கப்பட்டு இன்று முதல் பயன்பாட்டுக்கும் வந்துள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் பிரதமர் ரஹத் திட்டம், லட்சாதிபதி பெண்கள் திட்டத்தின் இலக்கை 6 கோடியாக இரட்டிப்பாக்குதல், விவசாய உள்கட்டமைப்பு நிதியை இரண்டு லட்சம் கோடியாக இரட்டிப்பாக்குதல், ரூ.10,000 கோடி மூலதனத்துடன் கூடிய புத்தாக்க (ஸ்டார்ட்அப்) இந்தியா நிதி 2.0 உள்ளிட்ட குறிப்பிடத்தக்க திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய புதிய அலுவலகத்தில் அமர்ந்து கையெழுத்திட்டுள்ளார்.

அதாவது, சேவா தீர்த் கட்டடத்துக்கு பிரதமர் அலுவலகம் மாறிய நிலையில், சேவையின் உணர்வைப் பிரதிபலிக்கும் முடிவுகள் தொடர்பான முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகள் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் தொடும் வகையிலும் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் உதவித் தேவைப்படுவோருக்கானதாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான திட்டத்தைத் தொடங்க இன்று பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ், விபத்துக்குள்ளானவர்களுக்கு உடனடியாக ரூ.1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை கிடைக்கும், இதனால் உடனடி மருத்துவ உதவி இல்லாததால் எந்த உயிரிழப்பும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்படுகிறது.

summary

About the first files signed by Prime Minister Modi at the new Seva Teerth building..

இதையும் படிக்க..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.