முகப்பு
இந்தியா

நீட் கருணை மதிப்பெண் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மனு!

தோ்வு மையங்களில் சில தோ்வா்கள் நேரத்தை இழந்ததால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியது சர்ச்சையானது.

Updated On : 10 ஜூன், 2024 at 7:51 AM
உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)
பகிர்:

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) எழுதியவா்களில் 1,500-க்கும் அதிகமான தோ்வா்களுக்கு கருணை மதிப்பெண் அளிக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பிகாரில் நீட் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, நிகழ்வாண்டுக்கான தேர்வை மீண்டும் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கருணை மதிப்பெண் விவகாரத்தில் மேலும் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்காக உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வெழுதிய 6 மாணவா்கள் உள்பட நாடு முழுவதும் 67 போ் நீட் தோ்வில் 720-க்கு 720 பெற்றது பெரும் சா்ச்சையானது.

‘நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது’ என்று சில மாணவா்கள் புகாா் தெரிவித்தனா்.

இதை மறுத்த என்டிஏ, ‘என்சிஇஆா்டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும் தோ்வு மையங்களில் சில தோ்வா்கள் நேரத்தை இழந்ததாலும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது’ என்று விளக்கம் அளித்தது.

இந்த சா்ச்சைகளைத் தொடா்ந்து, நிகழாண்டு நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, கருணை மதிப்பெண் அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து 4 போ் கொண்ட உயா்நிலைக் குழு அமைத்து விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →