நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கையில் நாடு முழுவதும் 18,000 இடங்கள் காலியாக இருந்ததைத் தொடா்ந்து, சேர்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) தகுதி மதிப்பெண்ணை (கட்-ஆஃப்) தேசிய மருத்துவத் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) குறைத்து உத்தரவிட்டது.
இதனால் முதுநிலை நீட் தோ்வில் 800-க்கு ‘மைனஸ்’ 40 மதிப்பெண் பெற்ற எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி உள்ளிட்ட இடஒதுக்கீடு பிரிவு மாணவா்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், இந்த முடிவை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், கட்-ஆஃப் குறைவதால், குறைந்த மதிப்பெண் உடையவர்களும் படிப்பில் சேர்வதால் மருத்துவர்களின் தரம் குறைய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை(ஜன. 27) நடைபெற்ற நிலையில், ஏற்கெனவே இவ்விவகாரம் தொடர்பாக தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையிலும், ’கொள்கை விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது’ என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
இவ்விவகாரம் தொடர்பான மனு உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.