முகப்பு
இந்தியா

பிரதமரின் முதல் பயணம் !

பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராகப் பதவியேற்ற பின், முதல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்

Updated On : 10 ஜூன், 2024 at 11:43 AM
கோப்புப் படம்
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற பி்ன், முதல் வெளிநாட்டுப் பயணமாக இத்தாலிக்குச் செல்லவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பிரதமர் மோடி ஜூன் 9ஆம் தேதி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றார். மூன்றாவது முறை பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணமாக இத்தாலிக்குச் செல்லவுள்ளார். இத்தாலியின் அபூலியாவில் ஜூன் 13 முதல் 15 வரை நடைபெறவுள்ள ஜி7 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களுடன், மோடி கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இத்தாலி, இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி ஜி7 மாநாட்டின் தலைவராக பொறுப்பேற்றது.

மார்ச் 2023இல் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி புதுதில்லிக்கு வருகை தந்தபோது, இத்தாலி மற்றும் இந்தியாவின் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ஜி7 உச்சிமாநாட்டின் முடிவைத் தொடர்ந்து, உக்ரைன் அமைதி உச்சிமாநாட்டை சுவிட்சர்லாந்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →