முகப்பு
இந்தியா

கேரளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை

கடன் தொல்லையால் கேரளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை

Updated On : 10 ஜூன், 2024 at 5:40 PM
பகிர்:

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் நெய்யத்தின்காரா பகுதியில், கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தறகொலை செய்து கொண்டனர்.

மணிலால் (52), மனைவி ஸ்மிதா (45), மகன் அபிலால் (22) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் மரணமடைந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவர்களது உறவினர்களுக்கு காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். தற்கொலை செய்வதற்கு முன்பு, அவர்கள் சில நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, நிதிச் சுமை காரணமாக தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறியிருக்கிறார்கள். அவர்கள் விரைந்து வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவர்கள் மூவரும் பலியான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.