முகப்பு
இந்தியா

ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சந்திரபாபு நாயுடு!

தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு தேர்வு.

Updated On : 11 ஜூன், 2024 at 7:25 AM
பகிர்:

ஆந்திரப் பிரதேச ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு உரிமை கோரினார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் ஜனசேனை கட்சித் தலைவர் பவன் கல்யாணும் ஆளுநரை சந்தித்தார்.

ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் தெலுங்கு தேசம், ஜனசேனை, பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து பெரும் வெற்றி பெற்றது.

மொத்தம் 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் மட்டும் 135 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆந்திர முதல்வராக சந்திரபாபுவின் பெயரை பவன் கல்யாண் முன்மொழிந்தார்.

இதனை அனைத்து எம்எல்ஏக்களும் ஏற்றுக் கொண்ட நிலையில், விஜயவாடாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் அவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சந்திரபாபு நாயுடு.

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்கவுள்ளார். இவ்விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →