முகப்பு
இந்தியா

பிரபல கன்னட நடிகர் கைது

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, ஒரு கொலை தொடர்பான விசாரணைக்காக கைது

Updated On : 11 ஜூன், 2024 at 8:29 AM
கோப்புப் படம்
பகிர்:

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, ஒரு கொலை தொடர்பான விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள சித்ரதுர்காவைச் சேர்ந்தவர் ரேணுகா சுவாமி. ஒரு மருந்தக நிறுவனத்தில் பணிபுரியும் சுவாமி, தர்ஷன் தூகுதீபாவுக்கு நெருக்கமான ஒரு நடிகைக்கு, சமூக ஊடகங்களில் தவறான கருத்துகளை அனுப்பியிருந்தாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், ரேணுகா சுவாமி ஜூன் 8ஆம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது உடல் ஜூன் 9ஆம் தேதி பெங்களூருவில் அமைந்துள்ள காமாக்ஷிபால்யாவில் உள்ள ஒரு வடிகாலில் இருந்து, தெரு நாய்கள் ரேணுகா சுவாமியின் உடலை இழுத்துச் செல்வதைக் கண்ட அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததாகவும் தெரிவித்தனர்.

இதனால் சந்தேகத்தின் அடிப்படையில், தர்ஷன் இன்று காலை மைசூரில் உள்ள அவரது பண்ணை வீட்டிலிருந்து பெங்களூருவுக்கு விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நடிகர் தர்ஷன் தூகுதீபா அனத்தாரு, கிராந்திவீர சங்கோலி ராயண்ணா மற்றும் காட்டேரா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

முழு கட்டுரையைப் படிக்க →