நவீன் பட்நாயக்கை சந்தித்த புதிய முதல்வர் மோகன் சரண்!
நவீன் பட்நாயக்கின் வீட்டுக்குச் சென்று பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு.
ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை முதல்வராக பதவியேற்கவுள்ள மோகன் சரண் மாஜீ புதன்கிழமை நேரில் சந்த்தார்.
நவீன் பட்நாயக்கின் வீட்டுக்கு நேரில் சென்ற மோகன் சரண் இன்று மாலை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் கலந்து அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் பேசிய மோகன் சரண், பதவியேற்பு விழாவில் நவீன் பட்நாயக் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
ஒடிஸாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 78 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது.
புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக எம்எல்ஏ-க்களின் கூட்டம் முதல்வராக மோகன் சரண் மாஜீ ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டார். துணை முதல்வர்களாக கே.வி. சிங், பிரவாதி பரிடா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புவனேசுவரத்தில் உள்ள ஜனதா மைதானத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று மாலை நடைபெறவுள்ளது.
கடந்த 24 ஆண்டுகளாக ஒடிஸா மாநில முதல்வராக நவீன் பட்நாயக் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.