பைசாபாத் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியை தேர்ந்தெடுத்ததன் மூலம், பாரதிய ஜனதா கட்சியின் பிரிவினைவாத மற்றும் வெறுப்பு நிறைந்த அரசியலை பொதுமக்கள் நிராகரித்துள்ளனர் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை கூறியுள்ளார்.
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மாநில தலைமையகத்தில் கட்சித் தொண்டர்களிடம் பேசுகையில், “பாஜக முறைகேடாக வாக்குச் சேகரிப்பில் இடுபட்ட போதிலும், பொதுமக்கள் சமாஜ்வாதிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பைசாபாத் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அயோத்தியில் பெற்ற சமாஜவாதி கட்சியின் வெற்றி, பாஜகவின் பிரிவினைவாத வெறுப்பு நிறைந்த அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர். பொதுமக்களின் ஆதரவு அரசியலுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
அனைவரும் வியக்கும் வகையில், சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பைசாபாத் தொகுதியில் நமது சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் பாஜகவின் லல்லு சிங்கை தோற்கடித்தார். மக்களவைத் தேர்தலில் அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெறவைத்து நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக சமாஜ்வாதி கட்சியை மாநில மக்கள் உருவாக்கியுள்ளனர். மக்களவையில் பொதுமக்களின் பிரச்னைகளை சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் கடுமையாக எழுப்புவார். பாஜக அரசின் தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் பாதாளச் சாக்கடைக்குச் சென்று கொண்டிருக்கிறது. பணவீக்கமும் வேலையின்மையும் உச்சத்தில் இருக்கிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.