-
இந்தியா

இன்று வயநாடு.. ராகுல் காந்தியின் நன்றி தெரிவிக்கும் பேரணி!

வயநாடு வந்தார் ராகுல்.. நன்றி தெரிவிக்கும் பேரணி!

பிடிஐ

ரே பரேலி தொகுதியில் நேற்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இன்று கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நன்றி தெரிவிக்கும் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்ற பெற்றிருக்கும் ராகுல் காந்தி, இன்று வாகனத்தில் பேரணியாகச் சென்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, ராகுல் முதல் முறையாக இன்று வயநாடு வந்துள்ளார். எடவண்ணா பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டு நின்று ராகுலுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

முன்னதாக இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்திறங்கிய ராகுல் காந்திக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றிருந்த ராகுல் காந்தி, நேற்று ரேபரேலி சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, இன்று வயநாடு வந்து நன்றி தெரிவிக்கும் பேரணியில் பங்கேற்றுள்ளார்.

முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய ராகுல், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவின்போது மக்களை புறந்தள்ளிவிட்டு தொழிலதிபர்களுக்கு மட்டுமே பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்தார். அதற்கு சரியான பதிலடியை மக்கள் தந்ததால் அயோத்தியில் பாஜக தோல்வியடைந்தது என்று கூறியிருந்தார்.

மேலும், பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் வாரிசுகளுக்கு இடமளிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் எம்.பி. ராகுல், இதுவே மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசம் என்று விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT