நாக்பூர் வெடி விபத்து ஐஏஎன்எஸ்
இந்தியா

நாக்பூர் வெடிமருந்து தொழிற்சாலை விபத்து: 5 பேர் பலி!

நாக்பூர் வெடிமருந்து தொழிற்சாலை விபத்தில் 5 பேர் பலி, 8 பேர் படுகாயம்

DIN

மகாராஷ்டிர வாதம்னா நகரில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பெண்கள் உள்பட 5 பேர் பலியானதாகவும் குறைந்தது 8 பேர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாமுண்டி வெடிமருந்து தொழிற்சாலையில் நண்பகல் 12 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை அமராவதி- நாக்பூர் நெடுஞ்சாலைக்கு 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

நாக்பூர் காவல்துறை ஆணையர் ரவீந்தர் சிங்ஹல், குறைந்தது 5 பேர் பலியானதாவும் காவலர்கள் இந்த வழக்குக் குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

சில கிமீ தொலைவில் வசித்தவர்கள் தொழிற்சாலையில் சத்தம் கேட்பதையும் பின்னர் கரும்புகை வானில் எழுவதையும் பார்த்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

காயமுற்றவர்களில் ஒருவர் நிலை மோசமாக இருப்பதாகவும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. ஆறு மாதங்களில் நாக்பூர் வெடிமருந்து தொழிற்சாலைகளில் நடக்கிற இரண்டாவது பெரிய விபத்து இது. 2023 டிசம்பரில் சோலார் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர் மேகவெடிப்பு: 6வது நாளில் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

ரூ. 1 கோடி வரை வங்கிக் கடன்... முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடக்கம்!

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர்: ககிசோ ரபாடா விலகல்!

கூலி வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து! மத்திய அரசு

SCROLL FOR NEXT