ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
ஆந்திரத்தில் ஆட்சியைப் பிடித்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, புதன்கிழமை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். முதல்வருக்கு பாஜக தலைவர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று காலை குடும்பத்துடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். நாயுடுவுக்கு கோயில் அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் புனித நீர் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பதவியேற்ற பிறகு முதன்முறையாக செய்தியாளர்களிடம் பேசிய நாயுடு கூறியதாவது,
கடந்த 5 ஆண்டுகளில் உலகின் புகழ்பெற்ற மதத் தலமான திருமலை கஞ்சா, மதுபானம் மற்றும் பிற மதங்களை ஊக்குவிக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. திருமலை அறக்கட்டனை வாரியத்தில் அவர்கள் விரும்பும் நபர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
திருமலையில் அடிப்படைத் தூய்மையும், சுகாதாரமும் இல்லை என்றும், பிரசாதம் தயாரிப்பதிலும் குறைவு உள்ளதாகவும், திருமலை தேவஸ்தானம் சுத்தம் செய்யப்பட வேண்டும். நாங்கள் அதை நாங்கள் செய்வோம் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இன்று மாலை 4.41 மணிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதியான ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கான மெகா டிஎஸ்சியில் தனது முதல் கையெழுத்தை இடுவார்.
மேலும், ஆந்திரத்தில் நில உரிமைச் சட்டத்தை ரத்து செய்வதற்கும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களை மேம்படுத்துவதற்கும் கையெழுத்திடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.