மும்பை: ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல்!
மும்பையில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் மருத்துவர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் கோனில் மனித விரல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மும்பையில் உள்ள மலாடில் வசிக்கும் ஓர்லெம் பிரெண்டன் செர்ராவ் (27) என்ற மருத்துவர், தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஆர்டர் செய்த பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீமை சாப்பிட்ட போது ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்தார். அவர் கூர்ந்து கவனித்தபோது, அதற்குள் ஒரு மனித விரல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவர் ஐஸ்கிரீமை கொண்டு மலாட் காவல் நிலையத்தில் புகாரளித்தார். உணவுக் கலப்படம் மற்றும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக அந்த தனியார் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
போலீசார் ஐஸ்கிரீமை விசாரணைக்கும், மனித விரலை தடயவியல் ஆய்வுக்கும் அனுப்பியுள்ளனர்.
உணவுப் பொருளில் உடல் உறுப்பு இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.