இத்தாலியில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டின் அமா்வில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அதிகாலை சென்றடைந்தார்.
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடிக்கு இத்தாலி அரசு வரவேற்பு அளித்தது.
இந்த பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, “ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலியில் தரையிறங்கிவிட்டேன். உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ஈடுபட ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒன்றாக, உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதையும், பிரகாசமான எதிர்காலத்திற்கான சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதைதே நோக்கம்.” எனத் தெரிவித்துள்ளார்.
தில்லியில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக, இம்மாநாட்டு அமா்வில் செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, மத்திய கிழக்கு பிராந்திய சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தப்படுமென மோடி தெரிவித்திருந்தாா்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜொ்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பின் உச்சிமாநாடு, இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் வியாழக்கிழமை (ஜூன் 13) தொடங்கி சனிக்கிழமை (ஜூன் 15) வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெறும் மாநாட்டு அமா்வில் பிரதமா் மோடி பங்கேற்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.