திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று திமுக பொதுச்செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலா்கள் கூட்டம் காணொலி காட்சி முறையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெறும்.
இக்கூட்டத்தில், ’வெல்லும் தமிழ் பெண்கள்’ எனும் தலைப்பில் வீடு, வீடாக மேற்கொள்ளப்படவுள்ள பரப்புரை குறித்து கலந்தாலோசிக்க, மாவட்டச் செயலா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், தொகுதி பாா்வையாளா்கள், தொகுதி அளவில் பயிற்சியாளராக தோ்வுசெய்யப்பட்டுள்ள மகளிா் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.