ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் பிபவ் குமாரின் நீதிமன்றக் காவல் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 13-ஆம் தேதி ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவாலை முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தில் வைத்து, அவரது தனி உதவியாளா் பிபவ் குமாா் பலமுறை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஸ்வாதி மாலிவால் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த தில்லி போலீஸாா், பிபவ் குமாரை கடந்த மே 18-ஆம் கைது செய்தனா்.
பின்னர் அவர் திகாா் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து, பிபவ் குமாா் சிறையில் இருந்தபடி காணொலி மூலம் நீதிபதி முன் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.
அப்போது அவரது காவலை மேலும் ஒருநாள் நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
விசாரணை அதிகாரி இன்றைய தினம் ஆஜராக காரணத்தால் அவரின் காவலை நீதிபதி நீட்டித்ததாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.