முகப்பு
ஜம்மு-காஷ்மீர்
இந்தியா

வதந்திகளை நம்ப வேண்டாம்: ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அறிவுறுத்தலுக்குக் காரணம்?

பொதுமக்களுக்கு ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அறிவுறுத்தல்

இந்தியா

வதந்திகளை நம்ப வேண்டாம்: ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அறிவுறுத்தலுக்குக் காரணம்?

பொதுமக்களுக்கு ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அறிவுறுத்தல்

Updated On : 15 ஜூன், 2024 at 7:23 AM
ஜம்மு-காஷ்மீர்
பகிர்:

ஜம்மு: நம்பர் பிளேட் அழிக்கப்பட்ட பொலாரியோ வாகனத்தில், சாதாரண உடையில் கையில் ஆயுதங்களுடன் இளைஞர்கள் பயணிக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கரவாதிகள் பயணிப்பது போல சித்திரிக்கப்பட்ட நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ஜம்மு - காஷ்மீர் காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

சிலர், தங்களது முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் ஒரு விடியோவைப் பகிர்ந்து, இதுபோன்று ஆயுதங்களுடன் செல்லும் வாகனங்களை பாதுகாப்புப் படையினர் எவ்வாறு அனுமதிக்கிறார்கள். அதுவும் வாகனத்தின் நம்பர் பிளேட் பேப்பரால் ஒட்டப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது என்று கருத்தும் பதிந்துள்ளனர்.

ஆனால், இந்த விடியோக்களைப் பார்த்த காவல்துறையினர், இதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் காவல்துறை கூறியிருப்பதாவது, இந்த விடியோக்களில் வெளியான வாகனம் ஆயுதப் படை காவலர்கள் சென்ற வாகனம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளப் பக்கத்தில், சிலர் இவ்வாறு பொறுப்பற்று தவறான தகவல்களை பகிர்ந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறார்கள். எனவே, மக்களே இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக, ஆயுதப்படையினர் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் மறைக்கப்படுவதும் வழக்கம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினர் புதன்கிழமையன்று மக்கள் கண்காணிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டமோ, சந்தேகத்துக்கு உரிய பொருள்கள் இருந்தாலோ காவல்துறைக்குத் தெரிவிக்குமாறு கூறியிருந்த நிலையில், இந்த விடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முழு கட்டுரையைப் படிக்க →