கொல்கத்தாவில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வெளியே கண்டெடுக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பாஜகவின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு வெளியே சந்தேகத்திற்கிடமான பொருள் ஞாயிற்றுக்கிழமை கிடந்துள்ளது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், போலீஸார், வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் மோப்ப நாய் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருள் வெடிகுண்டு அல்ல என்று வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படை தெரிவித்துள்ளது.
பொருளின் தன்மையை கண்டறியவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கொல்கத்தா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாஜக அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.