தில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி பிடிஐ
இந்தியா

தண்ணீர் பிரச்னையை தீர்க்காவிட்டால் காலவரம்பற்ற உண்ணாவிரதம்: பிரதமருக்கு அதிஷி கடிதம்!

தலைநகரில் தண்ணீர் பிரச்னை தீர்க்காவிட்டால் காலவரம்பற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும்.

PTI

தேசிய தலைநகரில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

செய்தியாளர்களுடன் சந்திப்பில் உரையாற்றிய அதிஷி, தலைநகருக்கு வழங்கவேண்டிய தண்ணீரை ஹரியாணா வெளியிடாததால் தில்லி தண்ணீர் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

முன்னதாக நேற்று 613 மில்லியன் கனஅடியில் இருந்து 513 மில்லியன் கனஅடி தண்ணீரை தில்லிக்கு வழங்கியது. ஒரு மில்லியன் கனஅடி நீர் தண்ணீர் 28,500 பேருக்கு தான் கிடைக்கும். அதாவது 28 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

தலைநகரில் உள்ள மக்கள் வெயிலுக்கு மட்டுமின்றி தண்ணீர் பற்றாக்குறையினாலும் போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிஷி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,

தில்லியில் தலைதூக்கிவரும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் நாளுக்குநாள் அவதியடைந்து வருகின்றனர். இதை உடனே தலையிட்டுத் தீர்க்க வேண்டும்.

இரண்டு நாள்களுக்குள் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால் ஜூன் 21 முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பான ஏற்கனவே ஹரியாணா அரசுக்குப் பலமுறை கடிதங்கள் எழுதியுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT