ஹரியாணா முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கிரண் சௌத்ரி மற்றும் அவரது மகள் ஸ்ருதி சௌத்ரி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
கிரண் சௌத்ரி மற்றும் ஸ்ருதி சௌத்ரி இருவரும் செவ்வாயன்று காங்கிரஸின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தனர்.
கிரண் சௌத்ரி ஹரியாணா முன்னாள் முதல்வர் பன்சி லாலின் மருமகள் மற்றும் பிவானி மாவட்டத்தில் உள்ள தௌஷம் தொகுதியின் எம்எல்ஏவாகவும், ஹரியாணா முன்னாள் பிரிவின் செயல் தலைவராக இருந்தார்.
பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இருவரும் பாஜகவில் இணைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.