இந்தியா

நீட் முறைகேடு: தேசிய தேர்வு ஆணையத்தை தடை செய்ய வேண்டும்- காங். மாணவ அமைப்பு கோரிக்கை!

தேசிய தேர்வாணையத்தை தடை செய்ய காங். மாணவ அமைப்பு கோரிக்கை!

DIN

காங்கிரஸின் மாணவ அமைப்பான இந்திய தேசிய மாணவ யூனியன் (என்எஸ்யூஐ) தலைவர் வருண் செளத்ரி, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் ஊழல் முறைகேடு விவகாரத்தால் தேசிய தேர்வு ஆணையத்தை (என்டிஐ) மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என புதன்கிழமை கோரிக்கை எழுப்பியுள்ளார்.

தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் ஜூன் 24-ல் பாராளுமன்றத்தை முற்றுகையிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா கூட்டணி தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடிக்கு நீட் முறைகேடுகள் தொடர்பாக கடிதம் மூலம் வலியுத்தவுள்ளதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்டிஏ மீது நடவடிக்கை எடுக்கவும் ஜூன் 24-க்குள் அமைப்பை தடை செய்யவும் மத்திய அரசுக்கு நாங்கள் இறுதி எச்சரிக்கை அளிக்கிறோம். நீட் தேர்வில் நடந்த ஊழலை மேல்நிலை அளவில் சிபிஐ, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. பிகார் மற்றும் குஜராத்தில் இருந்து வந்த புகார்களும் இது போலனவையே. என்டிஐவை கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் காப்பாற்ற முயற்சிக்கிறார். 24 லட்சம் நீட் மாணவர்களின் எதிர்காலத்தை அவர் கவனத்தில் கொள்ளவில்லை எனப் பேசியுள்ளார்.

ஜூன் 21-ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் வருண் செளத்ரி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதனூரில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம் திறப்பு

மாா்த்தாண்டம் அருகே பதுக்கிய மண்ணெண்ணெய் பறிமுதல்

போதையில்லா சமுதாயமே இலக்கு...

ரத்த சோகை விழிப்புணா்வு: 3,500 பெண்களுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை

பாா்வை பறிபோன பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

SCROLL FOR NEXT