முகப்பு
இந்தியா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சடலமாக மீட்பு!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சடலமாக மீட்பு..

Updated On : 20 ஜூன், 2024 at 10:56 AM
டேவிட் ஜான்சன்
பகிர்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன் பெங்களூருவில் அவரது அடுக்கு மாடி குடியிருப்புக்கு வெளியே சடலமாக மீட்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

52 வயதான டேவிட் ஜூட் ஜான்சன், கொத்தனூரில் உள்ள கனக ஸ்ரீ லேஅவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

டேவிட் ஜான்சன் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டேவிட் ஜான்சனுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மேலும், அவரது இறப்புக்கான காரணம் குறித்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகத்தின் அரசிகெரெவில் 1971-ல் பிறந்த டேவிட் ஜான்சன் 1996 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், 39 முதல் தரப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கௌதம் கம்பீர், அனில் கும்ப்ளே, இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகி ஜெய் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →