முகப்பு
இந்தியா

நீட் தேர்வு: உயர் நீதிமன்ற விசாரணைக்குத் தடை; நீட் கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுப்பு

நீட் தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்ற விசாரணைக்குத் தடை, நீட் கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம்

Updated On : 20 ஜூன், 2024 at 7:11 AM
பகிர்:

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு மீது பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க தடை விதித்தும், நீட் கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம்.

உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்டிருக்கும் நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தேசிய தேர்வு முகமை தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்கள் இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், நீட் தேர்வு தொடர்பாக தேசிய தேர்வு முகமை மற்றும் இதர மனுக்களும் ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீட் தேர்வெழுதிய 20 மாணவர்கள் இணைந்து, மறுதேர்வு நடத்தக் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், உயர் நீதிமன்றங்களில் நீட் தேர்வு தொடர்பான மனுக்கள் மீது விசாரணை நடத்தவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதுபோல, மாணவர்கள் தரப்பில் தொடரப்பட்ட மனுக்கள் மீது தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →